பசி கொடுமை… அம்பத்தூரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பீகார் தொழிலாளி

    0
    42
    Rep Image

    சென்னை அம்பத்தூரில் தங்கி வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் பசி கொடுமை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
    தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறுகிறது.

    சென்னை அம்பத்தூரில் தங்கி வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் பசி கொடுமை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
    தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறுகிறது. இதனால், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஏழைகள், கூலித் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த சூழ்நிலையில் அம்பத்தூரில் தங்கி வேலை செய்து வந்த கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் பீகாரைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று 25 வயதான ராஜீவ் என்ற கூலித் தொழிலாளி தன்னுடைய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தொழிற்சாலை நிர்வாகம் போலீசில் தகவல் அளித்தது. போலீசார் விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

    starving-to-death-7

    ஊரடங்கு காரணமாக கூலித் தொழிலாளர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. சொந்த ஊருக்கும் திரும்ப முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ராஜீவ் கடந்த ஒரு வாரமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், குழந்தை மற்றும் மனைவியைக் காண முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கூலித் தொழிலாளி ஒருவர் தன் உயிரை இழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.