மாவட்ட செய்திகள்

மனைவி, உறவினர்கள் கண் எதிரே சரக்கு ரெயில் மோதி கட்டிடத் தொழிலாளி பலி + "||" + Wife and relatives are opposite the eye The freight train collides Building worker kills

மனைவி, உறவினர்கள் கண் எதிரே சரக்கு ரெயில் மோதி கட்டிடத் தொழிலாளி பலி

மனைவி, உறவினர்கள் கண் எதிரே சரக்கு ரெயில் மோதி கட்டிடத் தொழிலாளி பலி
ஆந்திராவில் உள்ள தனது குழந்தைகளை பார்க்க மனைவி மற்றும் உறவினர்களுடன் தண்டவாளத்தில் நடந்து சென்ற கட்டிடத் தொழிலாளி, சரக்கு ரெயில் மோதி பலியானார்.
சென்னை,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த ஜம்முதாவிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வரகலாநாயுடு(வயது 45). கட்டிடத் தொழிலாளி. இவர், கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார். ஆனால் அவரது குழந்தைகள் மட்டும் சொந்த கிராமத்தில் உறவினர்கள் சிலரோடு வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இழந்த நிலையில் சொந்த கிராமத்துக்கு சென்று குழந்தைகளை பார்க்க வரகலாநாயுடு ஆசைப்பட்டார். மேலும் அவரது குழந்தைகளும் அவரை வீட்டுக்கு நேரில் வரும்படி போனில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கட்டிடத் தொழிலாளி வரகலாநாயுடு, தனது மனைவி மற்றும் உறவினர்கள் என 6 பேருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு நடந்து செல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு சாலை வழியாக புறப்பட்டு சென்ற அவர்கள், தமிழக-ஆந்திர எல்லையான பனங்காடு அருகே நடந்து சென்றால்கூட ஆந்திர மாநில போலீசார் அனுமதிப்பது இல்லை என்பதால் அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர்.

சரக்கு ரெயில் மோதி பலி

ஏழுகிணறு பாலம் என்ற இடத்தில் ரெயில்வே மேம்பாலத்தின் மீது வரகலாநாயுடு நடந்து சென்றபோது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் அடிபட்ட வரகலாநாயுடு, தனது மனைவி மற்றும் உறவினர்கள் கண் முன்னேயே பாலத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்து, அமரர் ஊர்தியில் வரகலாநாயுடு உடல் சொந்த கிராமத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தைகளை பார்க்கும் ஆசையோடு சொந்த கிராமம் நோக்கி நடந்து சென்றவர், தற்போது தனது மனைவி மற்றும் உறவினர்களோடு பிணமாக செல்வது உறவினர் களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காரை ஏற்றி டிரைவரை கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்
வில்லியனூர் அருகே டிரைவரை காரை ஏற்றி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்து இந்த கொடூர சம்பவம் நடந்து இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
2. மனைவி, உறவினர்கள் கண் எதிரே சரக்கு ரெயில் மோதி கட்டிடத் தொழிலாளி பலி
ஆந்திராவில் உள்ள தனது குழந்தைகளை பார்க்க மனைவி மற்றும் உறவினர்களுடன் தண்டவாளத்தில் நடந்து சென்ற கட்டிடத் தொழிலாளி, சரக்கு ரெயில் மோதி பலியானார்.
3. பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
அரகண்டநல்லூர் அருகே பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
4. விவசாயி மர்ம சாவில் திடீர் திருப்பம்: கணவரை அடித்து கொலை செய்த மனைவி கைது
தர்மபுரி அருகே விவசாயி மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரை மனைவியே அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
5. மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.